சாய்ந்தமருதில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இம்மாதம் கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம்.பௌஸி, சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், பொறியியலாளர் எம்.சீ. கமால் நிஸாத், டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா நிஸாத், பாடசாலை பிரதி அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகம், பகுதித் தலைவர் எஸ்.முஸம்மில் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
சதகா புலடின் வெல்பயார் பௌண்டேஷனின் பூரண அனுசரணையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் 51 வறிய மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த பொறியியலாளர் எம்.சீ. கமால் நிஸாத் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா நிஸாத் மற்றும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எல்.எம். இல்யாஸ், ஆசிரியர் கே.எம். நாசர், முகம்மட் நுஸ்கி ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் நிகழ்வின் போது நன்றி தெரிவித்தார்.