எரிபொருள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடமுள்ள எரிபொருளை நேற்று (27) நள்ளிரவிலிருந்து ,ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் விநியோகிப்பதற்கு நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏனைய அலுவலக மற்றும் அலுவல்கள் வீடுகளில் இருந்தே மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற விசேட ஊடகவியராளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
துறைமுகம், சுகாதாரசேவை அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் குறுகிய தூர போக்குவரத்து சேவை, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் தொழில் துறைக்காக ,தற்போது நிலவும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் தொகை விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக , மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுககளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜுலை 10ம் திகதி முதல் தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் கேஸ் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த நடவடிக்கை, நாட்டை முடக்கும் செயற்பாடு அல்ல என்று இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.