crossorigin="anonymous">
பொது

இலங்கை ஜனாதிபதி – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சந்திப்பின்போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

வலுவான அரச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவை பாராட்டினார்.

2022 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 65 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: