‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அறிக்கை கையளிப்பு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை இன்று (29) கொழும்பு கோட்டையில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, செயலணியின் தலைவர் கலாநிதி ராஜகிய பண்டித கலகொட அத்தே ஞானசார தேரரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க, கடந்த 2021 ஒக்டோபர் 26 மற்றும் 2021, நவம்பர் 06 ஆகிய திகதிகளில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.
2021 ஒக்டோர் 26ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாபிக்கப்பட்ட ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கால எல்லை கடந்த மே 27 ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.