இலங்கையில் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினர் சாகல ரத்னாயக்க நேற்று (29) தெரிவித்துள்ளார்.
ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நான்கு வாரங்களுக்குத் தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு, ஜூலை மாதத்தில் வரவேண்டும் என்றார்.
டீசலை இறக்குமதிச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 2வது வாரத்தில் டீசல் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.