crossorigin="anonymous">
பொது

‘Qatar Charity’ தடை நீக்க பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை

கட்டார் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் ‘Qatar Charity’ நிறுவன பிரதிநிதிகளை நேற்று (29) சந்தித்துள்ளனர்.

‘Qatar Charity’ நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

‘Qatar Charity’ என்பது கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.

தற்போது ‘Qatar Charity’ மீதான தடையை நீக்குவது தொடர்பில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டு ‘கட்டார் அறக்கட்டளை’ ‘Qatar Charity’ ஒரு பயங்கரவாத நிறுவனம் என்று பெயரிட்டு பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக தொண்டு நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − = 31

Back to top button
error: