crossorigin="anonymous">
பொது

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலக கோரி போராட்டம் முன்னெடுப்பு

கொழுன்பு காலிமுகத்திடல் 'கோட்டாகோகம' நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் இருந்து இன்று (08) போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி கொழும்பு கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்து கொழுன்பு காலிமுகத்திடல் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியில் சென்று கொண்டிருக்கின்றனர்

இதேவேளை, மாணவர்கள் இரவோடு இரவாக தங்கியிருந்து நாளை (09) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை (09)  நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள் கொழும்பு கோட்டை மற்றும் கொழுன்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோகம’ நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியில் சென்று கொண்டிருக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 5 = 15

Back to top button
error: