crossorigin="anonymous">
பொது

இலங்கை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டகாரர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து காணவில்லை

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி இன்று (09) தற்போது கொழும்பில் இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணி பல்வேறு தடைகள், கண்ணீர்ப்புகை பிரயோகங்களையும் மீறி மக்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன பாராளுமன்றத்தை அவசரசமாக கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

பாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அளவில்  கூட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 66 = 72

Back to top button
error: