crossorigin="anonymous">
பொது

பதவியை இராஜினாமா செய்ய தயார் – பிரதமர் ரணில்

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) அறிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் தலைமையில் இன்று (09) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தரும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (09) கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 4 = 9

Back to top button
error: