இலங்கை அரசியலில் சரியும் ராஜபக்சாக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அடுத்து இவ்வருடம் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பொதுமக்களால் நாடுதழுவிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து கடந்த மே 09 ஆம் திகதி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்
பின்னர் ஜூன் மாதம் 09 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்
இந்த நிலையில், நேற்று ஜூலை 09 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (09) முதல் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்
அதேவேளை இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (09) அறிவித்துள்ளார்.