crossorigin="anonymous">
பொது

‘இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும்’ – சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.

அதில், “கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“அப்படியானால் நமது அயலவனாக உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்ஷவினர் கோரும் போது நாங்கள் வழங்கத் தயார் ” என இந்திய
பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 12 = 17

Back to top button
error: