ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் : SSP ரொமேஷ் லியனகே பணி இடைநீக்கம்
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இடம்பெற்ற பொது மக்கள் போராட்ட நாள் ஜூலை 09 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் (STF) சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொமேஷ் லியனகே, ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சிலர் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.
தாக்குதல் சம்பவம் மற்றும் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக, நிறுவன ஒழுங்குவிதிகளின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபருக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் SSP ரொமேஷ் லியனகே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் (09) முதல் கொழும்பில் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Disciplinary action must be taken against police officers who attacked journalists, following an impartial, immediate investigation" -BASL
Details: https://t.co/erXRB6qqgW #lka #SriLanka #SLnews #News1st #ProtestLK #CrisisLK #MediaFreedom #Journalism #Attacks #Journalist pic.twitter.com/mHxwDYmOOl
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 10, 2022