ஜனாதிபதியின் பொறுப்புக்களை செயற்படுத்த பிரதமர் ரணில் நியமனம் – சபாநாயகர்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 09.07.2022 ஆம் திகதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார்
அதனடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இன்று 13 இராஜினாமா செய்வார் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டன
இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், அரசியலமைப்பின் 37 – 1 ஆம் உறுப்புரையின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (13) விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
As President Gotabaya Rajapaksa is not in the country, Prime Minister Ranil Wickremesinghe was appointed to perform and discharge the duties and functions as per the constitution – Speaker#SLnews #News1st #SriLanka #lka #GotabayaRajapaksa #PM #Ranil #Duties #Speaker #Eng. pic.twitter.com/ug0lWfUxir
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 13, 2022