பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்

கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள இலங்கை பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்ததுடன் இந்நிலையில், தற்போது இலங்கை பிரதமர் அலுவலகத்துக்குள்ளும் சற்று முன்னர் (13) போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Protesters have taken over the Prime Minister's office in Colombo #RanilWickramesinghe #President #SriLankaProtests #SriLankan #SriLanka #SrilankaNews #protestLK #protest #GotabayaRajapaksa #SriLankaToday #NewsUpdates pic.twitter.com/TPRV3XZ7BG
— Trending Ceylon (@trendceylonews) July 13, 2022