crossorigin="anonymous">
பொது

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் (15) உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 − = 68

Back to top button
error: