
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இன்று (16) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படும் என்றும் சபையில் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.