crossorigin="anonymous">
பொது

ஊடகவியலாளர்கள் மற்றும் சமய தலைவர்களுக்கு செயலமர்வு

பொருளாதார நெருக்கடியில் ஊடகவியலாளர்கள், மற்றும் சமய தலைவர்கள் எவ்வாறு தமது முன்னெடுப்புகளை முன்னெடுத்தல், சிறுபான்மை சமூகங்களின் தீர்வு விடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போன்றைவை தொடர்பில் செயலமர்வு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பு, ஊறனி அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய கால கட்டத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள், மக்கள் எதிர்கெண்டுள்ள பொருளாதார சிக்கல்கள், உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து சிரேஸ்ட வளவாளர்களான இருதையநாதன், மற்றும் கே.கணேசமூர்த்தி ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகளை முன் வைப்பது தொடர்பிலும் ஊடகவியலாளர்கள், மற்றும் சமயத் தலைவர்களும் கருத்துக்களை முன் வைத்தனர்.

செயலமர்வில் மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி
ஏ.யேசுதாசன், சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாஸ், சர்வமத ஒன்றியத்தின் உப தலைவர் சாஜஹான் மௌழவி, அமெரிக்கன் சிலோன் மிசனின் கிழக்கு பிராந்திய குருமுதல்வர் அருட்பணி எம்.லூகேயோன் (லூக்) உள்ளிட்ட சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: