இந்தியாவிற்கு கொரோனாவை எதிர்கொள்வதற்காக உலக நாடுகள் பல உதவிக்கரம்
கத்தார், குவைத், சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா, ருமேனியா, அமெரிக்கா, கஜகஸ்தான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், போன்ற நாடுகள் இதில் அதிகமான நன்கொடைகளை வழங்கியுள்ளதுடன் கொரோனாவை எதிர்கொள்வதற்காக உலக நாடுகள் பல உதவிக்கரம் நீட்டி உள்ளன.
வெளிநாடுகளிடம் இருந்து இதுவரை 9 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், 11,321 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 7,470 வென்டிலேட்டர், 5½ இலட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உதவியாக பெறப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கத்தார், குவைத், சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா, ருமேனியா, அமெரிக்கா, கஜகஸ்தான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், போன்ற நாடுகள் இதில் அதிகமான பங்களிப்பை வழங்கி உள்ளன.
வழங்கப்பட்ட நன்கொடைகள் அவ்வப்போது தேவையான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.