இலங்கை இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் நேற்று (22) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் நேற்று (22) இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
01. பிரதமர் தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள்
02. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
03. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
04. பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
05. கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
06. மஹிந்த அமரவீர – விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்
07. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
08. ஹரின் பெனாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
09. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டம் மற்றும் கைத்தொழில் அமைச்சர்
10. பிரசன்ன ரணதுங்க -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
11. எம்.யூ.எம். அலி சப்ரி – வெளிவிவகாரம்
12. விதுர விக்ரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
13. கஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி
14. அஹமட் நசீர் – சுற்றாடல் அமைச்சர்
15. ரொஷான் ரணசிங்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
16. மனூஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
17. டிரான் அளஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
18. நளின் பெனாண்டோ – வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (21) புதிய இடைக்கால ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.