crossorigin="anonymous">
பொது

விசேட டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்

43,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் தற்போது டெங்கு தொற்று அதிகளவில் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் விசேட டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விசேட டெங்கு ஒழிப்பு தினமாக இன்று (25) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 43,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூலை 21ஆம் திக தி வரை 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

நுளம்பு தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, கை, கால்களை மறைக்கும் ஆடைகளை அணிவதுடன் , பகலில் உடல் வெளிப்படும் பகுதிகளில் நுளம்பு விரட்டியை பயன்படுத்தவும். தூங்கும் போது நுளம்பு வலைகளை பயன்படுத்துவது (குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள்) சிறந்தது என் தெரிவிக்கப்பட்டுள்து.

விசேடமாக டெங்கு நுளம்பு இருக்கும் இடங்களை சுத்தம் செய்வதுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை துப்பரவு செய்வதன் மூலம் டெங்கு நோய் பரவலை எளிதில் தடுக்கலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − 24 =

Back to top button
error: