இந்தியாவின் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு
15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார்
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று (25) பதவியேற்றார்.
புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று காலை இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
கடந்த 2017ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்றுடன் (24) நிறைவடைந்துள்ளது
நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். தேர்தல் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது
இந்திய ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். கடந்த 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 64 சதவீத வாக்குகளுடன் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன
இந்திய துணைத் ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், இராணுவ தளபதிகள் விழாவில் பங்கேற்றனர்
இந்திய ஜனாதிபதி பதவியேற்பை முன்னிட்டு இந்திய பாராளுமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.