crossorigin="anonymous">
பொது

வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (27) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

வஜிர அபேவர்தன 1994ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் முதல் தடைவையாக இலங்கை பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். அன்றிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் அவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.

அத்துடன், அவர் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சராகவும், பொது நிர்வாக, முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தற்பொழுது செயற்பட்டு வருகிறார்.

1961.09.02ஆம் திகதி பிறந்த வஜிர அபேவர்தன, காலி மஹிந்த வித்தியாலயத்தில் கல்வியைப் பெற்றார். அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 2 =

Back to top button
error: