crossorigin="anonymous">
பொது

இலங்கை பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைத்து விசேட வர்த்தமானி

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு,

எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதோடு, 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − = 67

Back to top button
error: