இலங்கையில் கடந்த 27 நாட்களுக்குள் 1135 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 27 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் அதிகரிப்பு நாட்டில் காணப்படுவதுடன் இனங்காணப்படாத மேலும் தொற்றாளர்கள் பெருமளவில் சமூகத்தில் உள்ளார்கள் என்று அந்தப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் வைத்தியசாலைகளில்கொரோனா தொற்றாளர்களுக்கான வார்ட்டுக்களை தயார்படுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.