பொது
விடுமுறை இன்றி பாடசாலை செயற்பாடுகள்
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காது பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பாடசாலைகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.