அக்குறணை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த செயற்திட்டம்
கண்டி – அக்குறணை பிரதேசத்தில் கடந்த 25 வருட காலமாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆற்றில் சேரும் மண்ணை அகழ்ந்து எடுத்து மணலினை சுத்திகரித்து பயன்படுத்தக்கூடிய செயல்திட்டம் ( 30.07.2022 ) ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இச்செயற் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து அக்குறணை பிரதேச சபையிடம் கையளிக்கின்ற நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
சுமார் பத்து மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த செயற் திட்டத்தை கட்டம் கட்டமாக நாம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
இந்த செயற் திட்டத்தை சாத்தியப்படுத்த உதவி புரிந்த சர்வ மத தலைவர்கள், மத அமைப்புக்கள், இந்தத் திட்டத்திற்கு நிதி உதவிகளை வழங்கிய US AID SCORE நிறுவனத்தின் பணிப்பாளர் ட்ரவிஸ் கார்னர் அவர்கள் உட்பட முகாமையாளர் சத்துரிகா அவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் லசந்த அவர்கள், இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்கி ஆதரவளித்த பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் உட்பட
கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்கள், மத்திய மாகாண ஆணையர் மேனக ஹேரத் அவர்கள், துணை ஆணையர் நிலுகா அவர்கள், அக்குறணை பிரதேச செயலாளர், இந்த செயற் திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அலவதுகொடை பொலிஸ் நிலையம், அக்குறணை வர்த்தகர் சங்கங்களின் தலைவர்கள் உட்பட வர்த்தகர்கள் என அனைவருக்கும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்றார்.