crossorigin="anonymous">
பொது

மத்திய மலைநாட்டில் மழை, சீரற்ற காலநிலை

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகிறது. நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றது.

நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழைகாரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாய்ந்து வருகின்றன.

நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரதுறை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் மலைகளுக்கு மண் மேடுகளுக்கும் சமீபமாகவும் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களில் வாழ்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − 10 =

Back to top button
error: