கோத்தபய ராஜபக்சவுக்கு எந்த சலுகையும் இல்லை – சிங்கப்பூர்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு எந்த சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
விசா அடிப்படையிலேயே ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. கோத்தபயாவின் விசா காலம் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் தங்க கோத்தபயாவுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இதற்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதில் கூறும்போது, “பொதுவாகவே சிங்கப்பூர் அரசு யாருக்கும் சலுகைகள் தராது. வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும் சிறப்பு சலுகைகளை எங்கள் அரசு வழங்குவதில்லை.அதன்படி கோத்தபய ராஜபக்சவுக்கு நாங்கள் எந்த கூடுதல் சலுகையும் அளிக்கவில்லை” என்றார்.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் கூறும்போது,”தகுந்த பயண ஆவணங்கள் உள்ள வெளிநாட்டினரைத் தான் சிங்கப்பூர் அனுமதிக்கிறது. நாட்டிற்கு பாதகமான வெளிநாட்டினரை எந்த நிலையிலும் அனுமதிப்பதில்லை.” என்றார்.