‘QR’ குறியீட்டை பொது வெளியில் காட்சிப்படுத்த வேண்டாம்
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அட்டை பயனர்கள் தங்களது வாகனத்தின் QR குறியீட்டை ஏனையோருக்கு தெரியும் வண்ணம் பொது வெளியில் காட்சிப்படுத்த வேண்டாமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாகனத்தின் QR குறியீட்டை எவரும் அதனை சட்ட விரோதமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய பாதுகாப்பான இடத்தில் அதனை பேணுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.
வாகனத்தின் QR குறியீடு தொடர்பில் சந்தேகம் காணப்படுமாயின், தற்போதுள்ள தங்களது விபரத்தை நீக்கி மீண்டும் பதிவு செய்வதற்கான தெரிவும் fuelpass.gov.lk தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Request users of the National Fuel Pass not to display the QR code anywhere visible to others. Keep it in a secure place to make sure no one else uses it illegally.
The option to Delete a current profile feature is available now & the option to register again.— Kanchana Wijesekera (@kanchana_wij) August 4, 2022