பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்

மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரி
மை அடிப்படையில் பிரத்தியோக வரிசைகள் ஒழுங்கு செய்யப்பட்டு நேற்று (04) எரிபொருள் வழங்கப்பட்டது.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பெண்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருந்து சிரமத்தை எதிர்நோக்கி எரிபொருளை பெற்றுக்கொள்ள நேர்ந்தமையினால், பெண்களுக்கென தனியான வரிசையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று பெற்றோல் விநியோகிக்கப்பட்டிருந்து.
அரச திணைக்களம் மற்றும் தனியார் துறையில் கடமையாற்றும் பெண்கள் எரிபொருளைபெற்றுக்கொள்வதில் அசௌகரியத்தினை எதிர்நோக்கி வந்திருந்த நிலையில் அவர்களும் இலகுவாக குறுகிய நேரத்திற்குள் பெற்றோலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
தற்போது (QR) முறைமை அடிப்படையில் மிகவும் சுமுகமாக அனைத்து தரப்பினருக்கும் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதுடன் கற்பிணித் தாய்மாருக்கும் தனியான வரிசையில் பெற்றோல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.