சீனாவின் கப்பல் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை கோரிகை
சீனாவின் விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான, பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்திடம் கோரிகை விடுத்துள்ளது
இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை கப்பல் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்திடம் கோரிகை விடுத்துள்ளது
இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சீனாவின் விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான உளவுக் கப்பல் ஆகஸ்ட் 11-ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஆகஸ்ட் 17-ம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீன கப்பல் பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிவிக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது. இதனையடுத்தே கப்பல் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை, சீனாவிடம் கோரியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
யுவான் வாங் 5 கப்பல். ஜூலை 13 அன்று சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டு தற்போது தாய்வானுக்கு அருகில் ஹம்பாந்தோட்டையை நோக்கி பயணிக்கிறது.