பொது
கல்வி நடவடிக்கை திங்கள், செவ்வாய், புதன்
இலங்கை கல்வி அமைச்சு இந்தவாரம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.