பொது
மலையக ரயில் சேவை வழமைக்கு
இலங்கை ரயில்வே திணைக்களம் மலையக ரயில் சேவை நாளை (09) செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கிடையில் இடம்பெற்ற மண்சரிவு , மண் மேடுகள் மற்றும் பாறைகள் விழுந்தமையினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.