பிராந்தியம்
துணுக்காய் பிரதேச செயலக ஊழியர் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கடந்த 30.07.2022ம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஊழியர்கள் நேற்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு பிரதேச செயலகங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலக ஊழியர்களும் நேற்று சுமார் 2 மணி நேரம் இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின்போது அலுவலக பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.