பொது
டோனியர்-228 விமானம் இலங்கைக்கு வந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், இலங்கை கட்டுநாயக்க விமானப்படை தளத்தை இன்று (15) வந்தடைந்தது.
இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கிய விமானத்தை நீர் பீச்சியடித்து வரவேற்றனர்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.