crossorigin="anonymous">
பிராந்தியம்

ஸக்கியா ஸித்தீக் ற்கு ‘தீர்த்தகிரியார்’ வீர விருது

மாவனெல்லையைத் சேர்ந்த சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியரும் ஓய்வுபெற்ற ஆசிரியையுமான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீட் இந்தியாவின் ‘தீர்த்தகிரியார்’ வீர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் -15 திகதி விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன் திருச்சிராப்பள்ளி வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான ‘தேசத்தின் வீர விருதுகள்-2022’ வழங்கும் நிகழ்வில் எழுத்துத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீட் இந்தியாவின் ‘தீர்த்தகிரியார்’ வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து கொண்டவர்களில் 6 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர். அந்த 6 பேரில் ஒருவராக திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீட் உம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எழுத்துத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தன் வாழ்நாள் பூராகவும் எழுதிவரும் இவருக்கு இவ்விருது கிடைக்கப் பெற்றது சாலப் பொருத்தம். இவரை வாழ்த்துவதில் இலங்கை வாழ் இலக்கிய சமூகம் மாத்திரமல்ல, எமது நாடும் பெருமை கொள்கிறது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − = 32

Back to top button
error: