crossorigin="anonymous">
பிராந்தியம்

“சிறந்த ஆசிரியர் – சிறந்த பாடசாலை” செயலமர்வு

“சிறந்த ஆசிரியர் – சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளிற்கு அமைய
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான செயலமர்வொன்று நேற்று (26) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் சீரான உளவளத்தை பேணுவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவே “சிறந்த ஆசிரியர் – சிறந்த பாடசாலை” எனும் தலைப்பிலான பாடசாலை அதிபர்களுக்கான செயலமர்வானது நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட உளநல ஒருங்கிணைப்பாளர் வைத்தியகலாநிதி டான் சௌந்தரராஜாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறைக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்விற்கு பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அச்சுதன் முத்துலிங்கம், வைத்தியகலாநிதி தர்ஷினி முருகுப் பிள்ளை மற்றும் வைத்தியகலாநிதி கஸ்தூரி குகன் ஆகியோர் தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 43 = 44

Back to top button
error: