பிராந்தியம்
ராணுவத்தினரால் வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் செயற்பாடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வவுனிக்குளத்தினுள் மீன்குஞ்சுகள் விடும் செயற்பாடு நேற்று (29) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
65வது காலாட்படைப்பிரிவினரின் ஆலங்குளம் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் மாந்தை கிழக்கு உதவிப் பிரதேச செயலாளர் ஜெபமயூரன், ஆலங்குளம் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எடிரிசூரியா, மற்றும் பாலிநகர் இராணுவ அதிகாரி லேப்னன்ட் கேணல் சூரியாராச்சி, இராணுவத்தினர்கள் மற்றும் அம்பாள்புரம் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.