யாழ் மாவட்டபண்பாட்டு் விழா கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு் விழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (30) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் கடந்த கூட்ட தீர்மானங்களின் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
விழாவுக்கான மலர் வெளியீடு, மலருக்கான பெயர் தெரிவு, அதற்கான ஆக்கங்கள் கோரல், விழாவுக்கான குழுக்களை தீர்மானித்தல், நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்பு, நிதித்தேவைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட பண்பாட்டு பேரவை உப செயலாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட பண்பாட்டு பேரவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.