crossorigin="anonymous">
பொது

இடைக்கால வரவு – செலவு திட்டம் 115 வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (02) பிற்பகல் 5.30 மணியளவில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அசூரகுமார திஸாநாயக்க, ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பை கோரியதுடன், அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் அதற்கு எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இவ்வாக்கெடுப்பில், ஐ.ம.ச. உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி கட்சியைச் (ஜே.வி.பி.) சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத், பேராசிரியர் ஹரினி அமரசூரிய ஆகிய 03 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகிய 02 பேரும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 + = 57

Back to top button
error: