பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவிப்பிரமாணம்
ஐக்கிய இராச்சியத்தின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் (47) நேற்று (06) ராணி எலிசபெத் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூலையில் அவர் அறிவித்தார்.
ராணி எலிசபெத் ஸ்காட்லாந்தின் பால்மோரா அரண்மனையில் தங்கியிருப்பதால் லண்டனில் இருந்து விமானம் மூலம் ஸ்காட்லாந்துக்கு சென்ற போரிஸ் ஜான்சன் ராணியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கையளித்தார்.
தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் லிஸ் ட்ரஸுக்கு 81,326 வாக்குகளும் ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகளும் கிடைத்தன. அதிக வாக்குகள் பெற்ற லிஸ் ட்ரஸ் ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அரண்மனையில் நடைபெற்ற விழாவில் ஐக்கிய இராச்சியத்தின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றுக் கொண்டார். அங்கிருந்து விமானத்தில் லண்டன் திரும்பிய லிஸ் ட்ரஸ் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இல்லத்தில் குடியேறினார்.