“பாராளுமன்ற சார சங்ஹிதா” நூலின் இலத்திரனியல் பிரதி
https://www.parliament.lk/ta/secretariat/academic-journal எனும் இணைப்பின் ஊடாக “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் முதலாவது மற்றும் இரண்டாவது தொகுப்பை பார்வையிட முடியும்.
சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய பல்வேறு தலைப்புகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளன.
இதன் மீளாய்வுக் குழுவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி, களனி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஜீ. யோகராஜா, கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி கல்லூரியின் கலாநிதி டியூடர் வீரசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
ஜனநாயகம் தொடர்பில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வது தற்பொழுது சமூக, பொருளாதார அரசியல் போன்று அபிவிருத்திக்கும் சாதகமான தேவையாக உருவாகியுள்ளது. அதன்மூலம் உருவாகும் புதிய அறிவு, புதிய சாதனைகள் மற்றும் புதிய பரிணாமங்கள் ஊடாக ஜனநாயக சமூக முறையின் நிலைபேறான தன்மை மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தை மக்கள் மைய நிறுவனமாக மாற்றுவதை நோக்காகக் கொண்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்தப் புலமை இலக்கிய நூல் வருடாந்தம் வெளியிடப்படுகின்றது.