தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
திருமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இன்று (09) நவீன வசதிகளுடன் கூடிய பொலிஸ் நிலைய புதிய கட்டிடத்தொகுதி சிரேஷ்ட்ட பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
35000 குடும்பங்கள் வாழும் தம்பலகாமம் பிரதேசத்தில் 67 மில்லியன் ரூபா செலவில் இப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற சகல வசதிகளையும் கொண்டு மற்றும் பொலிஸ் நிலையத்தின் அனைத்து பிரிவினையும் உள்ளடக்கியதாக நவீன முறையில் கட்டப்பட்ட ஒரு கட்டிடமாக இப் பொலிஸ் நிலையம் காணப்படுகின்றது.
விசேடமாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக பிரத்தியேக விடுதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சேவையில் ஈடுபடுவதற்கு இலகுவாக அமைந்துள்ளது என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ராஜித்த ஸ்ரீ தமிந்த உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே .ஸ்ரீபதி, தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பிக்க பண்டார, தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.