crossorigin="anonymous">
பொது

விவசாய டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகம்

41 வருடங்களாக உயர் கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது. 132 மாணவர்களுடன் ஒரு வருட பன்முக கற்றலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

கிழக்கு பல்கழலைக்கழகத்தின் நல்லையா கேட்ப்போர் கூடத்தில், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகிரதன், வெளிவாரி கற்கைகள் மையத்தின் இயக்குனர் கலாநிதி ரீ.பிரபாகரன், விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.பக்திநாதன், கற்கை நெறியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.எஸ்.அமுதினி, விவசாய உயிரியல் துறை தலைவர் கலாநிதி ஆர்.நிரஞ்சனா ஆகியோருடன் பதில் பதிவாளர்களும் பங்குபற்றியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் சமூகம் சார் சிந்தனையுடன் உருவாக்கப்படுள்ள இக்கற்கை நெறியானது NVQ மட்டம் 4 மற்றும் SLQA மட்டம் 3 இக்கு சமானது. தொடர் பட்டபடிப்புவரை இட்டுச் செல்லும் வகையிலான கட்டமைப்பு, இக்கற்கைநெறியில் ஈடுபடும் மாணவர்களிற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாகும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 + = 82

Back to top button
error: