பிராந்தியம்
கண்டி மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் 14 மணி நேர நீர் விநியோகத் தடை நாளை (13) அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 13ஆம் திகதி மு.ப. 6 மணி முதல் பி.ப. 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என சபை அறிவித்துள்ளது.
ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.
நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.