பொது
8 மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டு
கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வருடம் முழுவதுமே ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 168 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 7 இலட்சத்திற்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது,