‘தாமரை கோபுரத்தின்’ செயற்பாடுகள் ஆரம்பம்
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயற்பாடுகள் நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘தாமரை கோபுரத்தின்’ செயற்பாடுகள் இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன
கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளும் நுழைவுச் சீட்டு மூலம் சகல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட முடியும். பிரவேச அட்டைக்கான கட்டணங்கள் 500 மற்றும் 2000 ரூபாவாகும்.
பாடசாலை மாணவர்களுக்கும் 200 ரூபா கட்டணம் அறவிடப்படும். தாமரை கோபுர வருகை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினால் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்காக பிரத்தியேக நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படும்.
தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. சுமார் 113 மில்லியன் டொலர் செலவில் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.