அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்காக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறைக்கு அமைவாக பாடசாலைகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மறைந்த பிரிட்டன் 2வது எலிசபெத் மகாராணி துக்க தினத்திற்கு அமைவாக அரசாங்கம் அரச நிறுவனங்களுக்கு விடுமுறையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.