crossorigin="anonymous">
பொது

10 அல்லது 12 மணி நேர மின்வெட்டு

கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மட்டுமே போதுமானது எனவும் நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகளையும் இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5000 மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று (22) தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என, தெரிவித்தார்.

நிலக்கரி இல்லாவிடில் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்க நேரிடும் எனவும், மின்சாரத் தேவையில் 35 வீதத்தை நிலக்கரி உற்பத்தி செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

மிகக் குறைந்த விலைக்கு சமர்ப்பித்த நிறுவனத்துக்கு நிலக்கரி விலைமனு வழங்கப்பட்ட போதிலும், மற்றொரு நிறுவனம் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக விலைமனு பெற்ற நிறுவனம் நிலக்கரி வழங்க மறுத்துள்ளமையால் நிலைமை தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 2 = 7

Back to top button
error: