crossorigin="anonymous">
பொது

விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்க வேலைத்திட்டம்

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு குறுகிய காலத்தில் பிரயோகரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பில் குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியயமைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் உரிய அனைத்துத் தரப்பினர்களினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் சகலரினதும் ஆதரவை தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பயிற்செய்கையில் ஈடுபடும் மரக்கறி விவசாயிகளுக்கு உரம் மற்றும் எரிபொருள் வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பிலும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது இந்தச் சட்டமூலம் குறித்த விளக்கம் தேவையென வருகை தந்த உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிறிதொரு தினத்தில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டி.பீ. ஹேரத், கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ கனக ஹேரத், கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ மொஹமட் முஸாமில், கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ தவராசா கலையரசன், கௌரவ வீ. இராதாகிருஷ்ணன், மற்றும் கௌரவ ஜீ. கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 + = 23

Back to top button
error: